
செத்தியு, ஜன 7 – செத்தியு, Kampung Panchor Merah வில் திரெங்கானு வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையான பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் சிக்கிய சூரியக் கரடி காட்டில் விடப்பட்டது. அந்த சூரிய
கரடிக்கு எதிராக கிராம மக்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அதனை பிடிப்பதற்காக பெசுட் மாவட்ட பெர்ஹிலித்தான் குழுவினர் கூண்டு வைத்ததாக திராங்கானு பெர்ஹிலித்தான் இயக்குநர்
லு கீன் சியோங் ( Loo Kean Seong ) தெரிவித்தார்.
அந்த பிராணி நேற்று விடியற்காலையில் கூண்டில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அது நல்ல நிலையில் இருந்ததால் அதன் இயற்கையான வாழ்விடப் பகுதியான காட்டில் விடப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் அந்த சூரிய கரடியின் நடமாட்டம் காணப்பட்டதாக கிராம வாசிகளில் ஒருவர் தெரிவித்தார். இறுதியில் அந்த கரடி வெற்றிகரமாக பிடிபட்டது குறித்து கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாக அவர் கூறினார்.



