Latestமலேசியா

கெடாவில் Rottweiler, Dobermann உள்ளிட்ட நாய் இனங்கள் தடைச் செய்யப்படலாம்

அலோர் ஸ்டார், ஏப்ரல்- 5 – நோன்புப் பெருநாளின் போது குவாலா கெட்டிலில் 2 Rottweiler நாய்கள் 5 பேரைக் கடித்துக் குதறிய சம்பவத்தை அடுத்து, நாய் உரிமைச் சட்டங்களை கடுமையாக்க கெடா மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையடுத்து, கால்நடை சேவைத் துறையும் தன் பங்குக்கு, Rottweilers, _Dobermans, Canary Dogs, German Shepherds, _Bull Terriers, _Bull Mastiffs உள்ளிட்ட ஆபத்தானதாகக் கருதப்படும் இனங்களைத் தடைச் செய்ய அல்லது கட்டுப்படுத்த பரிந்துரைத்துள்ளது.

இந்த நாய் இனங்கள் ஏற்கனவே அத்துறையின் இணையதளத்தில் “கட்டுப்படுத்தப்பட்டவை” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தான நாய்களிடமிருந்து பொது மக்களைப் பாதுகாக்க புதிய வழிகாட்டுதல்கள் தேவையென, வீடமைப்பு – ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மன்சோர் ஜகாரியா கூறியுள்ளார்.

அப்படி முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில், அத்தகைய ஆபத்தான நாய் இனங்களுக்கான புதிய உரிமங்களை முடக்குவது, புகார்கள் பெறப்பட்டால் ஏற்கனவே உள்ளவற்றை மதிப்பாய்வு செய்வது ஆகியவையும் அடங்கும்.

எது எப்படி இருப்பினும், கொள்கை மதிப்பாய்வின் போது, தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நாய் இனங்களின் தேசியப் பட்டியல்களை கெடா கால்நடை சேவைகள் துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார் அவர்.

மலேசியா, நடப்பில் Pit Bull Terriers, American Bulldogs, Neapolitan Mastiffs, Dogo Argentinos, Japanese Tosas, Fila Brasileiros, Akitas போன்ற ஆக்ரோஷமான நாய் இனங்களைத் தடைச் செய்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!