Latestமலேசியா

கெடாவுக்குச் சொந்தமா? பினாங்கு இறையாண்மைக்கு யாரும் சவால் விட முடியாது – குமரன்

பாகான் டாலாம், நவம்பர்-13, பினாங்கை சொந்தம் கொண்டாடும் கெடா மாநிலத்தின் அண்மைய கூற்றை, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் திட்டவட்டமாக சாடியுள்ளார்.

பினாங்கு மாநிலம் 1957 முதல் மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு சுயாட்சி மாநிலமாகும்.

எனவே, வெறும் வரலாற்று பத்திரங்களோ அல்லது சுதந்திர மலாயாவுக்கு முந்தையப் ஒப்பந்தங்களோ இன்று சட்டரீதியாக பொருந்தாது என அவர் கூறினார்.

பினாங்கு தற்போது மலேசியாவின் மிகச் சுறுசுறுப்பான மாநிலங்களில் ஒன்றாக இருந்து, பில்லியன் ரிங்கிட் முதலீடுகள், LRT திட்டம், Juru – Sungai Dua உயரடுக்குப் பாதை, மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், கெடா, பினாங்கு மற்றும் பெர்லிஸ் மாநிலங்கள் NCER பொருளாதார மண்டலத்தின் கீழ் இணைந்து சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, இதுபோன்ற ‘தேவையற்ற’ விவாதங்களில் ஈடுபடக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு தனது கௌரவத்தையும் சுயாட்சியையும் மலேசியா Madani கொள்கையின் கீழ் தொடர்ந்து காக்கும் என்றும் குமரன் உறுதியளித்தார்.

பினாங்கு மீதான உரிமைக் கோரல் விஷயத்தில் சட்ட நடவடிக்கைக்கு கெடா ஆயத்தமாகி வருவதாக அதன் Menteri Besar கூறியதை அடுத்து இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!