
கெடா, பெண்டாங், ஜனவரி 7 – நேற்று மாலை, கெடா ‘Pendang’ பகுதியில் இருக்கும் பழைய வீட்டு இடத்தில் சுமார் 4 மீட்டர் நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மக்கள் பாதுகாப்புப் படையான APM-இல் பணிபுரியும் வீரர் ஒருவர் கூறுகையில், தான் பணியில் சேர்ந்த 11 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மற்றும் ஆபத்தான ராஜ நாகத்தை பிடித்தது இதுவே முதல் முறை என தெரிவித்திருந்தார். அந்த ராஜ நாகம் அவரை நேராக பார்த்துக்கொண்டிருந்ததால், சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்க கூடுமென்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பாம்பு, Kampung Dato Syed Ahmad பகுதியில் உள்ள பழைய வீட்டின் தகர கூரையின் கீழ் மறைந்திருந்தது என்றும் அருகில் வசித்து ஆடவர் ஒருவர்தான் இதனைக் கண்டறிந்து APM-க்கு தகவல் அளித்துள்ளார் என்றும் அறியப்படுகின்றது.
மீட்பு பணியின் போது, பாம்பு சிக்கலான இடங்களில் ஒளிந்து வெளியே வந்தது. அதனால், அது தப்பிச் செல்லாதபடி APM குழு மிகவும் கவனமாக செயல்பட்டு, பாம்பை பாதுகாப்பாக பிடித்தது என்று APM அதிகாரி Leftenan Yuslina Yusoff அறிவித்திருந்தார்.



