
பெந்தோங், மார்ச்-28-Ikan Patin எனப்படும் கெளுத்தி மீன் உணவுக்கு RM902 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட புகாரில், கெந்திங் மலையில் உள்ள ஓர் உணவகம் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மார்ச் 16-ஆம் தேதி நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.
13 பேர் கொண்ட சுற்றுலா குழுவுக்கு 2.7 கிலோ கிராம் எடையுள்ள Ikan Patin பரிமாறப்பட்டது.
அதன் விலை கிலோவுக்கு RM338 என நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான இக்கட்டணம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொது மக்களின் கண்டனத்தை வரவழைத்துள்ளது.
உணவக உரிமையாளரோ, இந்த மீன் அரிதானது என்பதால் விலை அதிகம் என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு முழு விலையை முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்காதது தனது தவறு தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இப்போது, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN, இவ்விஷயத்தில் உணவக உரிமையாளாளர் கொள்ளை இலாபம் அடித்தாரா என விசாரணை நடத்துகிறது.



