கோலாலம்பூர், நவ 7 – கோலாலம்பூரில் கெப்போங் பாரு இரவு விடுதியில் குடிநுழைவு அதிகாரிகள் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் உபசரணையாளர்களாக பணியாற்றிய 28 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இது தவிர அங்கு சட்டவிரோதமாக வேலை செய்துவந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 7 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த கட்டிடத்திற்கு குடிநுழைவு அதிகாரிகள் வந்ததை கண்டதும் பிடிபடாமல் இருப்பதற்காக பெண்கள் பல திசைகளாக தப்பியோடினர்.
அவர்களில் சிலர் படிக்கட்டுகளின் மறைவிடங்களிலும் , ஸ்டோர் அறைகளிலும் மறைந்துகொண்டனர். இன்னும் சிலர் அந்த கட்டிடத்தின் பின் அறைகளில் புகுந்து பூட்டிக்கொண்டனர். இரவு மணி 11 அளவில் அங்கு சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் வான் முகமட் சவ்பி வான் யூசோப் ( Wan Mohammed Saupee Wan Yusoff ) தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 35 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.