
கோலாலம்பூர், அக் 13 –
கடந்த ஜூலை மாதம் 2ஆம்தேதி கே.எல்,ஐ.ஏ ஏரோடிரெய்ன் சேவை தொடங்கியது முதல் கடந்த செப்டம்பர் 31 ஆம்தேதிவரை 19 முறை தனது சேவையில் அது பாதிப்பை எதிர்நோக்கியது.
எச்சரிக்கையை வெளிப்படுத்தும் அடையாளம் மட்டுமின்றி பயணிகள் ஏரோடிரெய்ன் கதவை கட்டாயமாக திறக்க வேண்டிய நிலைமைக்கும் உள்ளானதாக போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோலா
( Hasbi Habibollah ) தெரிவித்தார்.
பழுதுபார்க்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதுடன் , திடீரென பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கான அதிகாரி ஒருவர் எப்போதும் ஏரோடிரெய்னில் பயணம் செய்து வருவதாகவும் இன்று மேலவையில் கேள்வி நேரத்தின்போது வாய்மொழியாக அளித்த பதிலில் ஹஸ்பி கூறினார்.
கே.எல்.ஐ.ஏ பயணிகளை கொண்டுச் செல்லும் ஏரோடிரெய்ன் சேவை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏரோடிரெய்ன் பழுதை உடனடியாக கண்டறிந்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.