
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஏரோட்ரெய்ன் சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறு இயந்திரக் கோளாறால் அல்ல, மாறாக மென்பொருள் பிழையால் ஏற்பட்டதென்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் விளக்கமளித்துள்ளார்.
இந்த தவறு இயந்திரக் கோளாறால் ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படமாலிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
456 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்படுத்தல் பணிகளைச் மேற்கொண்ட பிறகு, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.