
செப்பாங், மார்ச்-16-கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி சேவையில் ஈடுபட்டதன் தொடர்பில் பெரோடுவா அல்சா ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின்போது சிலாங்கூர் சாலை போக்குவத்துத்துறை அதிகாரிகள் அந்த வாகனத்தையும் பரிமுதல் செய்தனர்.
கே.எல்.ஐ.ஏ முனையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து முதலாவது முனையம் வரையிலான 5 கிலோமீட்டர் தூர பயணத்திற்கு இந்தோனேசிய பயணியிடம் அந்த ஆடவர் 80 ரிங்கிட் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஆடவர் மீது தரை பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின்
205 ஆவது பிரிவு (1) இன் கீழ் குற்றம் சாட்டப்படலாம். இக்குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்வரை அபராதம், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதனிடையே இத்தகைய செயல்களுக்குத் துணைப்போகும் நபர்கள் மீது இதே சட்டத்தின் 243 ஆவது பிரிவு ( 1) இன் கீழ் குற்றச்சாட்டப்படும் சாத்தியம் இருப்பதாகவும் சாலை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.



