Latestமலேசியா

கைதி படத்தின் மலாய் தழுவல் Banduan படப்பிடிப்பின் போது இயக்குநர் வெங்கட் பிரபு வருக

கோலாலம்பூர், செப்டம்பர்-27,

தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற ‘கைதி’ படத்தின் அதிகாரப்பூர்வமான மலாய் தழுவலான Banduan படப்பிடிப்பின் போது, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்புத் தளத்திற்கு வருகைபுரிந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

படத் தயாரிப்பு நிறுவனமான Astro Shaw அவற்றை அதன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

நேரில் வந்து கலைஞர்களுக்கு உற்சாகமூட்டியதற்காக வெங்கட் பிரபுவுக்கு அந்நிறுவனம் நன்றியும் தெரிவித்துக் கொண்டது.

Kroll Azry இயக்கத்தில் முன்னணி நடிகர்களான
Dato Aaron Aziz, Rosyam Nor, Afdlin Shauki உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Banduan திரைப்படம் வரும் நவம்பரில் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!