Latestமலேசியா

கை தொலைபேசியில் 100 ஆபாச படங்கள் வைத்திருந்த பெண்ணுக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

பாச்சோக் ,ஏப் 9- தனது கை தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் உட்பட சுமார் 100 ஆபாச பட உள்ளடக்கங்களை சேமித்து வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட உணவக உதவியாளரான 32 வயது பெண்ணுக்கு பாச்சோக் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

சித்தி முனிரா முகமட் என்ற தனித்து வாழும் தாயான அந்த பெண் மாஜிஸ்திரேட் பக்ருல் ரஷி அப்துல் ஹமிட் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை ஒப்புக்கொண்டார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8 மணிக்கு, காம்பங் குபாங் தெலகாவில் உள்ள ஒரு வீட்டில், பல ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்ட கைதொலைபேசியை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் நீதிமன்றம், அவருக்கு அபராதம் விதித்ததோடு அதனை செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!