Latestமலேசியா

கோத்தா கினபாலு பொழுதுபோக்கு பூங்காவில், பீவர் விலங்குகளால் தாக்குதல்; மூவர் காயம்

கோத்தா கினபாலு, செப்டம்பர் 11 – கோத்தா கினபாலு, தஞ்சோங் அரு பெர்டானா (Tanjung Aru Perdana) பூங்காவில், நீரெலி எனும் பீவர் (beaver) விலங்கு தாக்கியதில் மூவர் இன்று காயமடைந்தனர்.

சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பூங்காவைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த போது, சம்பந்தப்பட்ட பீவர்ஸ் (beavers) கும்பலால் இவர் தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவத்தைப் பார்த்த நால்வர், உடனடியாக உதவி செய்த நிலையில், அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானதோடு; அவர்களில் இருவர் காயமும் அடைந்துள்ளனர்.

இந்த காட்டு விலங்கு தாக்குதலில், உடலின் பல பாகங்களில் அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சபா வனவிலங்கு துறையின் இயக்குநர் Roland Oliver Niun கூறுகையில், அந்த பீவர்ஸ் (beavers) உணவைத் தேடிப் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருவது வழக்கம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

எனினும், இந்த விலங்கு ஆக்ரோஷமற்றது என்று தெரிவித்தவர், ஒருவேளை தூண்டப்பட்டாலோ, அல்லது எதிர்பார்த்த உணவு கிடைக்கவில்லை என்றாலோ ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்று கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!