
கோத்தா திங்கி, மார்ச்-26- ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ சௌஜானாவில் வீட்டருக்கே விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவனின் வலது கால் வடிகால் கம்பியில் சிக்கிக் கொண்டது.
நேற்று மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், சிறுவனின் கால் வடிகால் கம்பியினுள் மாட்டிக் கொண்டு, அதனை அவனால் வெளியே எடுக்க முடியவில்லை.
டி-சட்டை மற்றும் அரைக்கால் சட்டை அணிந்த சிறுவன் உலோக வடிகால் மூடியின் மீது அமர்ந்திருப்பதையும், அவனது வலது கால் உலோக வடிகால் கம்பியில் சிக்கியிருப்பதையும் காட்டும் புகைப்படமும் முன்னதாக வைரலாகியது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறையினர், சிறுவனின் கால் உலோகத் தட்டில் கெட்டியாக சிக்கியிருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து, உலோகம் வெட்டும் கருவியைப் பயன்படுத்தி சிறுவனின் காலை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.