
கோத்தா திங்கி, அக்டோபர்-10,
மலேசிய இந்து சங்கம் கோத்தா திங்கி பேரவையும், ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியும் முதல் முறையாக இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தேவாரக் கையேடு வழங்கும் நிகழ்வு அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதோடு பள்ளியில் நடைபெற்ற , கலைமகள் விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்க கோத்தா திங்கி பேரவையின் தலைவர் சுப்பரமணியம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் . அந்த நிகழ்வில் சுமார் 150 மாணவர்களுக்கு இலவசமாக தேவாரக் கையேட்டையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியை ‘ஶ்ரீ வித்யா மினி மார்ட்’ உரிமையாளர் திரு சரவணன் வழிநடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
இக்கையேடு பள்ளியின் துணைத் தலைமையாசிரியரும் மற்றும் சமய ஆசிரியருமான திருமதி சாந்தி மேற்கொண்ட முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டதாகும் . இம்முயற்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் கல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கி, நற்பண்புகள் கொண்ட குடிமக்களாக வளர்ச்சியடையச் செய்வதாகும் என ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி தேன்மொழி பரமசிவம் கூறினார்.