Latestமலேசியா

கோத்தா பெலூட் கோழி பண்ணையில் தீ விபத்து!

கோத்தா பெலூட் சபா, மே 6 – கோத்தா பெலூட் சபாவிலுள்ள கம்போங் ரம்பாயன் (Kampung Rampayan Ulu, Kota Belud) கோழி பண்ணை, தீ விபத்தில் 20,000 கோழிகள் உயிரிழந்தன.

தகவல் அறிந்த உடனேயே, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என்று கோத்தா பெலூட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் எல்கி பாகுக் (Elgie Bakuk) கூறினார்.

மேலும் தீயணைப்பு நடவடிக்கைகள், விபத்து ஏற்பட்ட சுமார் 1 மணி நேரத்திலேயே முடிவடைந்து விட்டதென்றும் அவர் தெரிவித்தார். இருந்தபோதும், 95 விழுக்காடு கோழிப்பண்ணைத் தீயில் கருகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இழப்புகள் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!