கோலாலம்பூர், ஜன 9 – எண்ணற்ற தெரு பிராணிகள் தினசரி பல்வேறு துன்பங்களுக்கும் சித்ரவதைக்கும் உள்ளாகி வருகின்றன.
அவற்றின் அடையாளமாக கோபி மற்றும் இதர வளர்ப்பு பிராணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி பேரணி ஒன்று இம்மாதம் 11 ஆம் தேதி மாலை சனிக்கிழமை , மாலை மணி 6. 30 க்கு மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது.
தெருக்களில் சுற்றித் திரியும் வளர்ப்பு பிராணிகளுக்கு சிறந்த எதிர்க்காலத்தை ஏற்படுத்தித் தருவதற்கு பிராணிகள் ஆர்வாலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , அதே வேளையில் அந்த பிராணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நீதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்து.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.