
கோலாலம்பூர், நவம்பர் 14 – கோலாலம்பூரின் புதிய மேயராக YBhg. Dato’ TPr. Fadlun bin Mak Ujud நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது, 1960இன் கூட்டாட்சி தலைநகர் சட்டத்தின் கீழ், நவம்பர் 15 ஆம் தேதியன்று அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
டத்தோ’ பாத்லுன், Universiti Teknologi Malaysia (UTM) யில் இருந்து நகரம் மற்றும் புறநகர் பகுதி திட்டமிடல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். நகரத் திட்டமிடல், புறநகர் வளர்ச்சி மற்றும் நகர மேலாண்மை துறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தை உடையவர்.
2022 முதல் அவர் Perbadanan Putrajaya- வின் தலைவர் ஆக பணியாற்றி வந்தார். அந்த காலக்கட்டத்தில் Putrajaya Smart City Blueprint 2025, Green Transformation Plan மற்றும் நகர்ப்புறத்தின் நலன் சார்ந்த முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்.
மேலும், அவர் Lembaga Perancang Bandar-இன் உறுப்பினராகவும், Pertubuhan Perancang Malaysia-வின் உயர்நிலை உறுப்பினராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டத்தோ’ பாத்லுனின் நியமனம் DBKL இன் தலைமையை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், முன்னாள் மேயர் முகமட் ஷாரிப் அவர்களின் சிறப்பான பங்களிப்புக்கு அரசாங்கம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. மேலும் PETRONAS இன் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கும் அவருக்கு வாழ்த்துகள் கூறப்பட்டது.



