Latestமலேசியா

கோலாலம்பூரில் ‘Hell on Wheels’; கோழிகளின் துயரத்தை வெளிப்படுத்திய PETA

கோலாலாம்பூர், ஏப்ரல்-10-கோலாலம்பூர் சாலைகளில் அண்மையில் “Hell on Wheels” எனும் பிரச்சாரத்துடன், அனைத்துலக விலங்கு நல அமைப்பான PETA மக்கள் மனதை உலுக்கியது…

அதாவது, சிறப்பு டிரக் வாகனமொன்றில், கூண்டில் நெருக்கமாக அடைக்கப்பட்ட கோழிகள் – உயிருடன் இருந்தும், பயமும், வேதனையும் அனுபவிக்கும் காட்சிகள் பொது மக்களுக்கு காட்டப்பட்டன.

இந்த டிரக், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றி, ஆடியோ ஒலிப்பதிவு மூலம் கோழிகள் சந்திக்கும் துயரத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது.

பெரும்பாலான கோழிகள் 5 முதல் 7 வாரங்களிலேயே கொல்லப்படுகின்றன. அவை, இட நெருக்கமான, ஆரோக்கியமற்ற சூழலில் வளர்க்கப்பட்டதால், பலவற்றுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படுவதாக PETA கூறுகிறது.

இந்த பிரச்சாரம், “கோழிகள் வெறும் உணவல்ல – உயிருள்ள உயிரினங்கள்” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தியது.

இந்நிலையில், மனிதாபிமானமான மாற்று வழியாக, தாவர அடிப்படையிலான வாழ்க்கை முறைக்கு ஏற்க மக்களுக்கு PETA அழைப்ப்பு விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!