Latestமலேசியா

கோலாலம்பூர் சிறார் காப்பகத்தில் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு

கோலாலாம்பூர், ஜனவரி-8 – கடந்த மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு சிறார் காப்பகத்தில் 2 குழந்தைகளை துன்புறுத்தியதாக, குழந்தைப் பராமரிப்பாளரான 26 வயது பெண் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

கோலாலாம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 குற்றச்சாட்டுகளையும், சரவாக்கைச் சேர்ந்த பெராடா ரந்தாய் (Perada Randai) ஒப்புக்கொண்டார்.

6 மாதக் குழந்தையின் முகத்தை தலையணையால் மூடியதாக முதல் குற்றச்சாட்டும், 9 மாதக் குழந்தையை கன்னத்தில் அறைந்து, தலையில் கொட்டியதாக இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

இச்சம்பவம் டிசம்பர் 15-ஆம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது

தண்டனை விவரங்கள் ஜனவரி 16-ஆம் தேதி அறிவிக்கப்படுமென அறிவித்த நீதிபதி, 12,000 ரிங்கிட் ஜாமீனில் அப்பெண்ணை விடுவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!