
பாரிட் புந்தார், ஆக 29 – புதன்கிழமை வீசிய கடுமையான புயலைத் தொடர்ந்து, கூண்டுகளில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான siakap மீன்கள் தப்பி ஓடியதால் Kuala Kurau குடியிருப்புவாசிகள் மீன்பிடி விழாவில் கலந்து கொண்டதுபோல் போட்டி போட்டிக்கொண்டு அம்மீன்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 200,000 க்கும் மேற்பட்ட முழுமையான வளர்ச்சியடைந்த பெரிய அளவிலான Siakap மீன்கள் கோலா குராவ் நீரில் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.
புதன்கிழமை அதிகாலை புயலுக்குப் பிறகு, ஒரு சில உள்ளூர் மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கிய மீன்களைப் பிடித்தபோது குடியிருப்பாளர்கள் அச்சமடையத் தொடங்கினர்.
உண்மை நிலையை அறிந்த பிறகு, அப்பகுதியில் வசிப்பவர்கள் அந்த மீன்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிலர் வலைகள் மற்றும் இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து சுற்றியுள்ள மக்களுக்கு விற்கிறார்கள்.
சில குடியிருப்பாளர்கள் அதிக அளவில் மீன்களைப் பிடித்து கூண்டு உரிமையாளர்களுக்கு மீண்டும் விற்றனர்.
இன்று வரை, Kampung Nelayanனில் அமைந்துள்ள இடம் மீனவர்கள் மீன் வேட்டையாடுவதற்கான ஒரு மையமாக உள்ளது.