இரண்டாவது பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் ‘சூப்பர்மேன்’ சாகசம்; பதின்ம வயது பையன் கைது

ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-2 – இரண்டாவது பினாங்கு பாலமான Sultan Abdul Halim Muadzam Shah பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் ‘சூப்பர்மேன்’ சாகசம் புரிந்த பதின்ம வயது பையன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
பத்து மாவோங்கிலிருந்து பத்து காவான் நோக்கிச் செல்லும் வழியில் அப்பையன் செய்த ‘சாகச’ வீடியோ முன்னதாக ஃபேஸ்புக்கில் வைரலானது.
இதையடுத்து போலீஸ் அவனைத் தீவிரமாகத் தேடிய நிலையில், 14 வயது அப்பையன் நேற்று முன்தினம் தானாகவே சரணடைந்தான்.
அவனது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
எனும் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவத்தில், அப்பையன் தனது 2 கால்களையும் பின்னால் நீட்டிக் கொண்டு ‘சூப்பர்மேன்’ பறப்பது போல் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றான்.
பின்னால் வந்த காரிலிருந்தவர்கள் அதனை வீடியோவில் பதிவுச் செய்ய, அந்த 20 வினாடி காட்சிகள் வைரலாகின.