
கோலாலம்பூர், அக் 1 –
கெடா குருனில் உள்ள ஒரு வளாகத்தில் நேற்று அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து சட்டவிரோத மின்னணு கழிவுகள் பதப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின்போது
71.8 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட ஆயிரக்கணக்கான டன் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், தாமிரம் , அலுமினியம் ,வாகனங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை கூட்டரசு சேமப்படையின் புக்கிட் அமான் விசாரணைப் பிரிவு , பினாங்கு சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக கூட்டரசு சேமப்படையின் கமாண்டர், மூத்த உதவி ஆணையர் ரோஸ்லி முகமட் யூசோப் கூறினார்.
உளவுத்துறை மூலம் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து , குருன் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள வளாகத்தில் காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 21 ஆண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவர் , பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் , நான்கு வங்கதேசிகள் , ஆறு இந்தியர்கள் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஒன்பது பேரும் அடங்குவர்.