Latestமலேசியா

‘சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்’ எதிர்ப்பு பேரணிக்கு போலீஸார் தடை

‘சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்’ எதிர்ப்பு பேரணிக்கு போலீஸார் தடை

கோலாலம்பூர், பிப்ரவரி-7,

‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டு தலங்களுக்கு எதிராக சாம்ரி வினோத் நடத்த திட்டமிடப்பட்ட பேரணியை போலீஸ் தடைச் செய்துள்ளது.

இப்பேரணி தலைநகர் கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில், SOGO உரிமையாளர், Pertama Complex, Harrison உட்பட அருகில் உள்ள வணிக வளாகங்களும் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன.

தவிர, விழாக்காலம் என்பதாலும் அப்பகுதி பரபரப்பாக இருக்கும்; இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் கேடு ஏற்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு காரணங்களால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Fadil Marsus தெரிவித்தார்.

எந்தவோர் அனுமதியும் பெறாமல் பேரணி நடத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் எச்சரித்தார்.

தடையை மீறி நடந்தால், பொது மக்கள் அப்பேரணியில் பங்கேற்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஆனால், பேரணி திட்டமிட்டபடி இரவு 8 மணிக்கு தொடங்கும் என சாம்ரி வினோத் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!