
சபாக் பெர்ணாம், மார்ச்-3-சிலாங்கூர், சபாக் பெர்ணாம் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ‘Op Pintas’ நடவடிக்கையில், போலீஸார் 49 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.
விடியற்காலை 2 மணிக்கு நடந்த இந்த நடவடிக்கையில், 42 முதல் 45 வயதுடைய மூன்று இந்தோனேசிய ‘pom pom’ படகோட்டிகள், 25 முதல் 40 வயதிலான 46 இந்தோனேசிய கள்ளக் குடியேறிகள் கைதாகினர்.
அவர்களில் 20 பெண்களும் அடங்குவர் என, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
சபாக் பெர்ணாம் கரையோரம் வாயிலாக இந்தோனேசியாவின் Tanjung Balai-க்குத் திரும்பும் வழியில் அவர்கள் சிக்கினர்.
அந்த படகு ‘சவாரிக்கு’ ஒவ்வொருவரும் RM1,500 முதல் RM2,000 வரை பணம் செலுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனைவரும் சபாக் பெர்ணாம் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.



