கோலாலம்பூர், செப்டம்பர் 13 – சமூக நல இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட OP GLOBAL சோதனை நடவடிக்கையில் காப்பாற்றப்பட்ட 402 பேரில், 13 சிறார்கள் இயற்கைக்குப் புறம்பான உடலுறவு வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
முதற்கட்ட சோதனையில், 4 சிறார்கள்தான் எனப் பதிவாகிய நிலையில், தற்போது மேலும் 9 சிறார்களும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாகத் தேசிய காவல்துறை படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசைன் கூறினார்.
தற்போது 392 சிறார்கள் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஆட்டிசம், ஊனமுற்ற சிறார்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் என 10 பேர் சமூக நல மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.