Latestமலேசியா

என் முகத்தையும் குரலையும் AI பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்; லிம் குவான் எங் அம்பலப்படுத்தினார்

ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – முதலீட்டுத் திட்ட மோசடி கும்பலொன்று AI அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தன் முகத்தையும் குரலையும் எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை, பினாங்கு முன்னாள் முதல் அமைச்சர் லிம் குவான் எங் அம்பலப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தை நான் விளம்பரத்துவது போன்று போலியாக அவ்வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் வர்த்தகர் அல்ல அரசியல்வாதி என்றார் அவர்.

இணையத்தில் கிடைத்த பழைய குரல் பதிவை புதிதாக அதுவும் மொழிமாற்றி வெளியிட்டுள்ளார்கள்.

இது முழுக்க முழுக்க மோசடி; பொது மக்கள் யாரும் நம்ப ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் குவான் எங் ஆங்கிலத்தில் கொடுத்த பேட்டியின் குரல் பதிவை எடுத்து சீன மொழியில் மாற்றியமைத்து வெளியிடப்பட்டுள்ள அவ்வீடியோ வாட்சப்பில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!