
பத்து மலை, ஏப்ரல்-12-GOPIO Malaysia ஏற்பாடு செய்த ‘கோபியோ வணிக வலையமைப்பு ஆய்வரங்கு மற்றும் வணிக விருதுகள் 2026’ நிகழ்ச்சி, Batu Caves, Shenga மாநாட்டு மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், இந்திய உயர் ஆணையர் B.N. Reddy முக்கிய விருந்தினராகப் பங்கேற்றார்.
2006-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, இவ்வாண்டும் தொழில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய இணைப்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து கோபியோ மலேசிய வணிக மன்றமான GMBC தலைவர் Dr சிவம் துரைராஜா வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில், முக்கிய விருந்தினர்கள் தொழில் வளர்ச்சியும் தொடர்பை வளர்த்துக் கொள்ளுதலும் முக்கியம் என்பதை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற AI மற்றும் வணிக கருத்தரங்கில், AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம், வணிக வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம், மற்றும் உள்ளூர் வணிகங்களை அனைத்துலக அளவுக்கு கொண்டு செல்லும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறந்த சாதனைகளை பாராட்டும் வகையில் வணிக அங்கீகார விருதுகளும் வழங்கப்பட்டன.
Silver, Gold மற்றும் Platinum பிரிவுகளில் பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதாக சிவம் கூறினார்.
முக்கிய அம்சமாக, மலேசிய இந்திய வம்சாவளி சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், கோபியோ சமூக மேம்பாட்டு நிதி, அதாவது GCDF, பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அது குறித்து விவரித்த சிவம், இளைஞர்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஒன்றிணைந்து, ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இது நடைபெற்று முடிந்தது.



