Latestமலேசியா

சர்ச்சைக்குரிய நகர் புதுப்பிப்பு மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஆக 28 – சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பிப்பு மீதான 2025ஆம் ஆண்டு மசோதா எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் .

எதிர்க்கட்சிகள், தேசிய முன்னணி மற்றும் ஏழு PKR  MPக்கள் உட்பட அரசாங்க MPக்கள் சிலரிடமிருந்து மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்று முன்னதாக, கூட்டணியின் 30  MPக்கள் மசோதாவை தாமதப்படுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்த அனுமதிக்க மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக தேசிய முன்னணி துணைத் தலைவர் Mohamad Hasan தெரிவித்தார்.

அந்த மசோதா இன்று விவாதிக்கப்படாது மற்றும் வாக்களிக்கப்படாது என்பதோடு இது மக்களுக்கு கிடைத்த வெற்றியென பாஸ் கட்சியைச் சேர்ந்த Ahmad Fadhli Shaari முகநூலில் அறிவித்துள்ளார்.

இந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்காக இன்று மாலையில் நாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உத்தேச சட்டத்திற்காக அதன் வாக்களிப்பு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Mingகின் உதவியாளர் இதற்கு முன் தெரிவித்திருந்தார்.

முதல் வாசிப்புக்காக கடந்த வாரம் அந்த மசோதாவை சமர்ப்பித்த Nga இன்று இரண்டாவது வாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!