Latestமலேசியா

சாப்பிட தயாராகும்போது வீட்டின் கூரைக்கு மேல் ராஜ நாகம்; குடும்பத்தினர் அதிர்ச்சி

சிக், டிச 31 – சாப்பிடுவதற்கு தயாரானபோது வீட்டின் கூரையின் மீது ராஜநாகம் இருந்ததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

சிக்கிலுள்ள (Sik ) கம்போங் சாரோக் கிட்டில் ( Kampung Charok Kit ) தனது 39 வயது மைத்துனர் சமையல் அறைக்கு சென்று சோறு போடுவதற்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென கூரைப் பகுதிக்கு மேல் ராஜநாகம் இருந்ததைக் கண்டு அவர் உடனடியாக கூச்சல் போட்டு தனக்கு எச்சரிக்கை செய்ததாக வீட்டின் கூரைக்கு கீழே அமர்ந்திருந்த 35 வயது பெண் Hafisyah Ishak தெரிவித்தார்.

உடனடியாக Sik சிவில் பாதுகாப்புப் படையை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து அவர்களிடம் தெரிவித்ததோடு , பாம்பு கீழே விழுந்து வீட்டிற்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலையில் இருந்ததாக Hafisyah கூறினார்.

தனது வீடும், தனது தாயாரின் வீடும் புதருக்கு அருகில் அமைந்துள்ளதாகவும், முன்னதாக சில கிராமவாசிகள் அங்கு பல பாம்புகளை பார்த்ததை கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே Sarjan Done Bakar தலைமையிலான Sik சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழு புகார்தாரரின் வீட்டில் காணப்பட்ட ராஜநாகத்தை சிறப்பு உபகரணத்தை பயன்படுத்தி அதனை பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றதாக Sik மாவட்ட சிவில் தற்காப்பு அதிகாரி Leftenan Haisul Aishah Mohd Napiah கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!