
புத்ராஜெயா, ஏப்ரல்-1-அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டத்தின் மாதாந்திர உதவி, இன்று தகுதியானவர்களின் MyKad கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது.
குடும்பங்களுக்கு RM100, முதியவர்களுக்கு RM50, தனிநபர்களுக்கு RM50 என இவ்வுதவி வழங்கப்படுகிறது.
இதுவே வறிய நிலையில் உள்ளவர்களுக்கான eKasih பட்டியலில் இருப்பவர்களுக்கு கூடுதல் தொகை அதாவது குடும்பங்களுக்கு RM200, முதியவர்களுக்கு RM150, தனிநபர்களுக்கு RM100 என வழங்கப்படுகிறது.
இந்த உதவி, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளில், ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையில் செலவிடும் வகையில் இந்த SARA உதவி வழங்கப்படுகிறது.
உதவிப் பெறுநர்கள், sara.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் தங்கள் MyKad விவரங்களைப் பயன்படுத்தி, உதவி தொகையைச் சரிபார்க்கலாம்.



