
செகாமாட் – ஆகஸ்ட்-28 – ஜோகூர் செகாமாட்டில் நேற்றிரவு 7.56 மணிக்கு ரிக்டர் அளவையில் 2.5-தாக பதிவாகிய வலுவற்ற நில நடுக்கம் மீண்டும் உலுக்கியது.
செகாமாட்டுக்கே வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அது உணரப்பட்டதாக, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia கூறியது. உயிர் அல்லது பொருள் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
நேற்று காலையில் தான் அம்மாவட்டத்தில் 3.2 magnitude அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறன்று ஏற்பட்ட முதல் சம்பவத்தோடு சேர்த்தால் அங்கு ஒரே வாரத்தில் பதிலான நான்காவது நில நடுக்கம் இதுவாகும்.
வலுவற்றதென்றாலும், இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக MET Malaysia கூறியது.
பொது மக்கள் தொடர்ந்து நிதானம் காக்க வேண்டுமென்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.