
சிக்னல் கோளாறு காரணமாக கெலானா ஜெயா LRT சேவையில் கடும் தாமதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-19,
கோம்பாக் மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களுக்கு இடையே சிக்னல் அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து கெலானா ஜெயா (Kelana Jaya ) எல்ஆர்டி வழித்தட சேவைகள் தாமதங்களை எதிர்கொள்கின்றன. இந்த இடையூறினால் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் சேவை பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்ததாகவும், கோம்பாக் முதல் கேஎல்சிசி வரை ரயில்கள் தற்காலிகமாக இயக்க முடியாத நிலையில் இருப்பதாக Rapid Rail Sdn Bhd வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கும், விரைவில் இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கும் பொறியியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச பேருந்து சேவைகளை Rapid Rail ஏற்பாடு செய்துள்ளது. புத்ரா ஹைட்ஸிலிருந்து வரும் ரயில்கள் ஆறு நிமிட இடைவெளியில் Pasar Seni நிலையத்தில் திரும்பும்.
கூடுதலாக, Pasar Seni மற்றும் கேஎல்சிசி ( KLCC ) இடையே 20 நிமிட இடைவெளியில் ஒரு Shuttle ரயில் சேவை இயக்கப்படும். கோம்பாக் மற்றும் கேஎல்சிசி இடையே பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.



