Latestமலேசியா

சிங்கப்பூர் தீ விபத்தில் சிக்கி மீண்டு வந்த மகனுக்காக ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்திய பவண் கல்யாண் மனைவி

திருப்பதி, ஏப்ரல்-15, ஆந்திர மாநில துணை முதல் அமைச்சரும் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாணின் மனைவி Anna Lezhneva, திருப்பதி ஏழுமலையானுக்கு முடிக் காணிக்கைச் செலுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த பாரம்பரிய கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர் Anna; 45 ஆண்டுகளாக கிறிஸ்துவத்தைப் பின்பற்றி வருபவர் தனது மகனுக்காக அவ்வாறு செய்துள்ளார்.

அத்தம்பதியரின் மகன் Mark Shankar Pavanovich ஏப்ரல் 8-ஆம் தேதி விடுமுறையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த போது, பள்ளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீயில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இதனால் பதறிப் போன Anna, மகனின் உயிரைக் காத்தால் திருப்பதி பத்மாவதி தாயாருக்கு காணிக்கை வெண்டிக் கொண்டார்.

வேண்டியபடி மகன் குணமடைந்து வந்ததால், திருப்பதி சென்று Anna முடி காணிக்கைச் செலுத்தியுள்ளார்.

அதோடு, திருப்பதி ஏழுமலையானை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கையெழுத்துப் போட்டிருப்பது, வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!