சிங்கப்பூர் மலேசிய கவிதை ஆய்வரங்கம் சிறப்பாக நடந்தேறியது

சிங்கப்பூர், அக் 14 –
சிங்கப்பூரைச் சேர்ந்த கவிமாலை அமைப்பும், மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் இணைந்து சிங்கப்பூர் -மலேசியா கவிதை ஆய்வரங்கத்தை அண்மையில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெகுச் சிறப்பாக நடத்தின.
மலேசியாவிலிருந்து, கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் முனைவர் உதயகுமார், செயலாளர் எழுத்தாளர் காந்தி முருகன், பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் கவிஞர் மகேந்திரன் நவமணி, இயல் மன்றச் செயலாளர் குமாரி திவ்வியா பன்னீர்செல்வம், உப்சி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள், தமிழமுதன் ஆறுமுகம், பிரியங்கா வடிவேல், சத்தியமலர் ஆகியோர் இந்த ஆய்வரங்கில் கட்டுரைப் படைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் வருகை புரிந்ததோடு, மலேசிய- சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்கு இந்த ஆய்வரங்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக திகழும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் – மலேசிய உறவுப்பாலம், இளையத் தலைமுறையினரிடையே தொடர்ந்து பல கவிதை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வரங்கம் முதல்கட்டமாக அமைந்துள்ளதாக மலேசிய தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் பொன் கோகிலம் கூறினார்.
எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்