மலேசியா

சித்தியவான் பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு; முகமூடி அணிந்த இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங், பிப்ரவரி-21,

பேராக், சித்தியவான் அன்-நஸ்ரியா பள்ளிவாசலில் வியாழக்கிழமை அதிகாலை, முகமூடி அணிந்த 2 ஆடவர்கள் நுழைந்து உண்டியல் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

அதிகாலை 4.50 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

காலை 5.40 மணிக்கு தொழுகைக்காக வந்த பள்ளிவாசல் பராமரிப்பாளர், உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.

பணம் திருடப்பட்டதாக உடனடியாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து CCTV உதவியுடன் விசாரணை நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மஞ்சோங் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!