
சித்தியவான், மே-9- பேராக், சித்தியவானில் SUV வாகனமொன்று KFC உணவகத்தை மோதி உள்ளே போய் நின்ற வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்றிரவு சாலை சமிக்ஞை விளக்குப் பகுதிக்கு அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது.
சமிக்கை விளக்கை மோதி கட்டுப்பாட்டை இழந்து KFC உணவகத்தை அவ்வாகனம் மோதி நின்றது.
மோதியதில் வாகனத்தின் முன் பகுதி மோசமாக மடங்கிபோனது.
ஒரு பதின்ம வயது பையன் அதனை ஓட்டிச் சென்றதாகவும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் அதில் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
அவர்களில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியும் ஒருவர்.
வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டவரை பொது மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஓட்டுநரின் நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை