Latestமலேசியா

சித்திரைப் புத்தாண்டு இந்திய சமூகத்திற்கு பொருளாதார செழிப்பைக் கொண்டு வரட்டும்; ரமணன் வாழ்த்து

புத்ராஜெயா, ஏப்ரல்-14, இன்று பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டு இந்தியச் சமூகத்திற்கு மென்மேலும் பொருளாதார செழிப்பைக் கொண்டு வரும் என, தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து, இந்தியச் சமூகமும் முன்னேற்றம் அடைய பொருளாதார வளம் ஒரு முக்கிய அம்சமாகும் என்றார் அவர்.

இந்தியச் சமூகம் பொருளாதார ரீதியாக, குறிப்பாக வர்த்தகர்கள் மற்றும் சிறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தங்களை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டும் என, இந்தியச் சமூக விவகாரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பவருமான ரமணன் கூறினார்.

“தோட்டத்துறை, வணிகம் மற்றும் பொதுத்துறைகள் உட்பட, நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் பங்கு மற்றும் ஈடுபாட்டை மறுக்க முடியாது”

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப, இந்திய சமூகமும் தொடர்ந்து முன்னேற வேண்டும், குறிப்பாக பொருளாதாரத் துறையில் வளர வேண்டும்.

அந்த வகையில், இந்தியத் தொழில்முனைவர்களின் மேம்பாட்டுக்காக தெக்குன் நேஷனல் (TEKUN) கீழ் SPUMI மற்றும் SPUMI Goes Big ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது தவிர, SME வங்கியின் கீழ் வணிகம் நிதித் திட்டம், Bank Rakyat கீழ் BRIEF-i கடனுதவித் திட்டம், SME Corp நிறுவனத்தின் கீழ் I-BAP இந்திய வணிக முடுக்கி திட்டம், Amanah Ikhtiar Malaysia கீழ் பெண் தொழில்முனைவோருக்கான PENN திட்டம் என பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே வணிக மேம்பாட்டுக்காக மடானி அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளையும் இந்தியச் சமூகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டோடு,
விஷு புத்தாண்டை கொண்டாடும் மலையாளிகளுக்கும் வைசாகி புத்தாண்டை கொண்டாடும் சீக்கியர்களுக்கும் டத்தோ ஸ்ரீ ரமணன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!