Latestமலேசியா

சிரம்பானில் பயங்கரம்; உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் சுட்டுக் கொலை

சிரம்பான், நவ 20 – சிரம்பான், சென்டாயானிலுள்ள (Sendayan) Nusari Biz உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன் இரண்டு வாகனங்களில் அங்கு வந்த இருவர் அந்த ஆடவரை சந்தித்ததாக கூறப்பட்டது.

பின்னர் அந்த ஆடவர் சாலையின் மறுபுறம் ஓடிச் சென்றதாகவும் , துப்பாக்கிச் சூடு சந்தம் கேட்டு அவர் சரிந்து விழுந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நேற்றிரவு 11.23 மணிக்கு இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஷஹார் அப்துல் ரஹ்மான் (Azhar Abdul Rahman ) கூறினார்.

சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையக நடவடிக்கை அறையில் அதிகாரிகள் பணியில் இருந்தபோது, ​​அந்த உணவகத்தில் நடந்த கொலை குறித்து புகார் அளித்த ஒருவரிடமிருந்து 999 அவசர எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த விவரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என Azhar Abdul Rahman தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!