
சிரம்பான், ஜூலை-5 – சிரம்பானில் பேரங்காடி வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து, 59 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார்.
இரவு 8 மணிக்கு மேல் அது குறித்து தகவல் கிடைத்ததாக, நெகிரி செம்பிலான் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
மூன்றாவது மாடியிலிருந்து விழுந்தவர், முதல் மாடியில் சிக்கிக் கொண்டார்.
சடலம் மீட்கப்பட்ட நிலையில் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.