Latestமலேசியா

சிரம்பானில் 10 வயது சிறுவனை கைவிட்ட பெற்றோர், குழந்தையை சித்ரவதை செய்த சந்தேகத்தில் கைது

சிரம்பான், ஜனவரி-8 – சிரம்பானில் 10 வயது சிறுவன் ஒருவன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான்.

Star Valley கடை முன் பயந்தும், நடுங்கியும் இருந்தவனை, பொது மக்கள் கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

பரிசோதித்ததில், அவனது உடலில் துணி மாட்டும் கம்பி மற்றும் கைப்பேசி charger கம்பியால் அடிக்கப்பட்ட காயங்கள் இருந்தன.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான்.

சித்ரவதை செய்த சந்தேகத்தில், சிறுவனின் 30 வயது தாய் மற்றும் 22 வயது மாற்றான் தந்தை கைதுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன், 2020 ஆம் ஆண்டே சிலாங்கூர், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் தலை, வலது தோள்பட்டை, மார்பு மற்றும் முதுகில் சுடுநீர் பட்டதால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!