Latestமலேசியா

UNHCR அகதிகள் மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வதை அனுமதிப்பதா? விவரங்கள் ஆராயப்படுவதாக அமைச்சர் சாலிஹா தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி-13 – அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையமான UNHCR-ரில் பதிவுச் செய்துகொண்டுள்ள அகதிகளை மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிப்பதற்கான விவரங்களை, அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

1951 ஐநா அகதிகள் பிரகடனத்தில் மலேசியா கையொப்பமிடவில்லை என்றாலும், அகதிகள், குறிப்பாக மியன்மார் ரொஹின்யா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மீது மலேசியா எப்போதுமே மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடிப்பதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா கூறினார்.

அகதிகள் மற்றும் புகலிட விண்ணப்பத்தாரர்களை நிர்வகிப்பதற்கான புதிய உத்தரவின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட அகதிகளுக்கு, சமூக உதவிகளை வழங்குவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து, மக்களவையில் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் எழுப்பியக் கேள்விக்கு, அமைச்சர் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அவ்வாறு கூறினார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட துறைகளின் நிபந்தனைகள் மற்றும் தொழிலாளர் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விவரங்கள் துல்லியமாக ஆராயப்படுவதாக Dr சாலிஹா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!