
மெர்சிங், ஆகஸ்ட்-16 – GGK எனப்படும் சிறப்புப் இராணுவப் பட்டாளத்திற்கான தளவாடக் கொள்முதலில் அரசாங்கம் தரத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்; மாறாக, முகவர்களின் பரிந்துரைகளைக் கண்மூடித்தனமாக நம்பி செயல்படக் கூடாது என, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கட்டளையிட்டுள்ளார்.
இராணுவத் தளவாடங்களை வாங்கும் போது அரசாங்கத்திற்கு மேலதிக கவனம் தேவை.
சந்தை விலைக்கு ஏற்பவும் பயனர்களின் தேவைக் கருதியுமே அவை கொள்முதல் செய்யப்பட வேண்டும்; முகவர்கள் பரிந்துரைத்தாலும் நல்ல பரிசீலனைக்குப் பிறகே அவற்றை வாங்க வேண்டும்.
தேவையில்லாத அல்லது அநியாய விலையில் தளவாடங்களை வாங்கிக் குவிப்பது நட்டத்தில் தான் போய் முடியும்.
எனவே, அவற்றை வாங்கி அரசாங்கப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என மாமன்னர் அறிவுறுத்தினார்.
ஜோகூர் மெர்சிங்கில் GGK இராணுவப் பட்டாளத்தின் 60-ஆம் நிறைவாண்டை ஒட்டிய அணிவகுப்பு நிகழ்வில் ஆற்றிய அரச உரையில் சுல்தான் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.