Latestமலேசியா

சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச பட வீடியோ வைத்திருந்த ஆடவனுக்கு 6 மாதம் சிறை

ஈப்போ , ஏப் 8-சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களைக் கொண்ட வீடியோவை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தையான ஆடவர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தது.

மனைவியை இழந்தவரான 42 வயதுடைய இதாம் ருஸ்லா முகமது ஷாஹூரி, (Idham Rhusla Mohamad shahuri ) தனக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி ஜீன் ஷர்மிலா ஜெசுதாசன் ( Jean Sharmila Jesudasan) முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது அதனை ஒப்புக் கொண்டார்.

கடந்த திங்கட்கிழமை மதியம் மணி 12.51 அளவில் பேராக் தெங்கா மாவட்டத்தின் பாரிட், Belanja Kiri, Kampung Sadang கிலுள்ள தனது வீட்டில் வீட்டில், 5 (Oppo A35) கைபேசியில் சிறார் ஆபாச வீடியோவை வைத்திருந்ததாக Idham Rhusla மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 10ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத சிறைத் தண்டனையுடன் , கூடுதலாக, சிறைத் தண்டனை முடிந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜீன் ஷர்மிலா
உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!