Latestமலேசியா

சிறுவன் ராயனை புறக்கணித்த குற்றச்சாட்டு தற்காப்பு வாதத்திற்கு தயாராகும்படி தாயாருக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஜூலை 21- ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் ஸைய்ன் ராயன் அப்துல் மதின் (Zayn Rayyan Abdul Matin) 2023 ஆம் ஆண்டு மரணம் அடைந்தது தொடர்பில் குழந்தை புறக்கணிப்பு அல்லது அலட்சியம் மீதான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அச்சிறுவனின் தாயார் இஸ்மனியா அப்துல் மானார் ( Ismanira Abdul Manaf ) தற்காப்பு வாதத்திற்கு தயாராகும்படி நீதிபதி டாக்டர் ஷலிசா வார்னோ ( Syahliza Warnoh ) உத்தரவிட்டுள்ளார்.

ஸைய்ன் மரணம் தொடர்பான குழந்தை புறக்கணிப்பு குற்றச்சாட்டில் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க Ismanira வுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

30 வயதான Ismanira வுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்தை அரசு தரப்பு வெற்றிகரமாக நிருபித்துள்ளதால் தற்காப்பு வாதம் புரியும்படி செஷன்ஸ நீதிமன்ற நீதிபதி Syahliza தீர்ப்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு முதன்மையான முகாந்திரத்தை வெற்றிகரமாக நிரூபித்துள்ளதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

சிறார் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றச்சாட்டிற்காக தனது தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு Ismanira அவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!