Latestமலேசியா

சிலாங்கூர் ராஜா மூடா Tengku Amir Shah மற்றும் Cik Afza Fadini Abdul Aziz ஆகியோரின் அரச திருமண சடங்கை முன்னிட்டு, கிள்ளானில் இஸ்தானா சாலை இந்த வியாழக்கிழமை காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும்

கிள்ளான்,செப் -30,

கிள்ளானில் உள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் அமைந்துள்ள Masjid Istana Dirajaவில் இந்த திருமண சடங்கு நடைபெறும்.

விழா முழுவதும் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதற்கு போலீஸ் பொறுப்பேற்றுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரம்லி காசா ( Ramli Kasa ) தெரிவித்தார்.

Sultan Abdul Aziz அரச Galeriயில் இருந்து இஸ்தானா ஆலம் ஷா நோக்கித் தொடங்கும் அரச ஊர்வலத்திற்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச மணமகள் ஊர்வலத்தின் சீரான ஏற்பாடுகளுக்காக சாலை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரம்லி காசா கூறினார்.

கிள்ளானில் இதர சாலைகள் மூடப்படாது, என்பதோடு அங்கு போக்குவரத்து போலீசார் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் ரம்லி காசா குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!