
பேரா மாநில ம.இ.கா சிலிம் ரீவர் மகா லட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக RM10,000 நிதி உதவி
சிலிம் ரீவர், பிப்ரவரி 20 –
பேரா ,சிலிம் ரிவரில் உள்ள மகா லட்சுமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பேராக் மாநில ம.இ.கா ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. அதோடு கும்பாபிஷேக நாளன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கவிருக்கிறது.
சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் திருப்பணியைக் காண வருகை அளித்த மாநில ம.இ.கா. தலைவரும் தேசிய ம.இ.கா. உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எம். ராமசாமி செய்தியாளர் களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் , சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு அன்றிலிருந்து இன்று வரை ம.இ.கா.பாடுபட்டு வருகிறது.
இந்த சேவையிலிருந்து ம.இ.கா பின்வாங்கியது கிடையது என்று குறிப்பிட்ட ராமசாமி இந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுத்து எடுத்து வருவதையும் எடுத்துரைத்தார்.
ஆலய திருப்பணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் 10 ஆயிரம் ரிங்கிட்டை ஆலய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பேராக் மாநில தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் , மகளிர் இளைஞர் பிரிவினரும் கலந்துக்கொண்டனர்.
நிதியை பெற்றுக்கொண்ட ஆலயத் தலைவர் காசிராஜா ம. இ.காவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் அவர் இந்த ஆலயம் காணவிருப்பது மூன்றாவது கும்பாபிஷேகம் என குறிப்பிட்டார்.



