Latestஉலகம்மலேசியா

சீனாவின் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமத் அன்வார் சந்திப்பு

பெய்ஜிங், செப் 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவிற்கான தனது நான்கு நாள் அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார்.

சீனாவின் மிகப்பெரிய மின்வணிக சில்லறை விற்பனையாளரான JD.com உடனான சந்திப்புடன் அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடங்கின.

இது நாடு முழுவதும் 580 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

இந்த நிறுவனம் Nasdaq 100 உறுப்பினராகவும், Fortune 500 Global நிறுவனமாகவும் உள்ளது.

JD.com அதன் JD Global எல்லை கடந்த விற்பனைப் பிரிவு மூலம் மலேசியாவில் செயலில் உள்ளதோடு இது வெளிநாட்டு பயனீட்டாளர்களுக்கு எல்லை தாண்டிய மின்வணிக சேவைகளை வழங்குகிறது.

JD Logistics தலைமை நிர்வாக அதிகாரியும் அதன் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான Hu Wei, அந்நிறுவனத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

நாட்டின் ஒரே இலாப நோக்கற்ற தொழில்முறை அமைப்பான சீனா Semiconductor தொழில் சங்கத்தின் பிரதிநிதிகளையும் அன்வார் சந்தித்தார்.

இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தொழில்துறையின் உற்பத்தி மதிப்பில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டைக் கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் மலேசியா-சீனா பொருளாதார மற்றும் வணிக உரையாடலில் அன்வார் கலந்துகொள்வார்.

இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 180 சீன வணிக மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!