
சீனா, ஜூலை 10 – சீனாவிலுள்ள காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்து நேற்று நண்பகலில் சீனா ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள ஹுய்தெங் (Huiteng) காலணி தொழிற்சாலையில் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், 180-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 35 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்



