
சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதி – அன்வார் அறிவிப்பு
தமபுன், பிப்ரவரி-15,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடு முழுவதும் உள்ள சீன தேசிய மாதிரி இடைநிலைப் பள்ளிகளுக்காக கூடுதலாக 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.
இந்நிதி, பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
இது மலேசியா மடானி கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
சீன புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, பேராக், தம்புனில் நடைபெற்ற ‘மடானி காசே அன்பளிப்பு விழாவில், அன்வார் அதனை அறிவித்தார்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிக் உள்ளிட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அன்வார் தமதுரையில் கல்வியானது மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்குபவர்களாக மட்டுமல்லாமல், ஒழுக்கம் மற்றும் மத, இன வேறுபாடுகளை மதிக்கும் குடிமக்களாக உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சுமார் 3,000 மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.



