Latestமலேசியா

சுகாதார அமைச்சின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு RM14 மில்லியன் செலவிடப்பட்டது

கோலாலம்பூர், மார்ச்-11 – நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளில் கடந்தாண்டு EH எனப்படும் வேலை நேர நீட்டிப்புத் திட்ட அமுலாக்கத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான அலவன்ஸ் தொகை வழங்க, சுகாதார அமைச்சு 14.39 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவிட்டுள்ளது.

2023-ல் அத்தொகை 11.59 மில்லியனாக மட்டுமே இருந்ததாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சாவுனி நாடாளுமன்ற மேலவையில் கூறினார்.

ஒவ்வொரு பணியாளருக்கும் வழங்கப்பட்ட சராசரி அலவன்ஸ் தொகையும் இந்த ஈராண்டுகளில் அதிகரித்துள்ளது.

2023-ல் மாதமொன்றுக்கு 2,323 ரிங்கிட்டிலிருந்து கடந்தாண்டு 3,059 ரிங்கிட்டுக்கு அது உயர்ந்ததாக அவர் சொன்னார்.

EH திட்டத்தை அமுல்படுத்தியுள்ள கிளினிக்குளின் எண்ணிக்கை, அத்திட்டம் தொடங்கியதில் முதல் நோயாளிகளின் வருகை உள்ளிட்ட புள்ளிவிவரங்களைத் தருமாறு செனட்டர் Dr லிங்கேஷ்வரன் அருணாச்சலம் கேட்டிருந்த கேள்விக்கு துணை அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

நாட்டில் மொத்தம் 49 கிளினிக்குள் இந்த EH திட்டத்தை செயல்படுத்தியுள்ளன; அதாவது வேலை நாட்களில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சேவைத் துறை சீர்திருத்தம் மீதான சிறப்புப் பணிக் குழு முன்னோடித் திட்டத்தில் பங்கேற்ற 6 கிளினிக்குகள், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பணியாற்ற உத்தரவிடப்பட்டன.

43 சுகாதார கிளினிக்குள் இந்த ET நேர நீட்டிப்புக் காலத்தில், 592,966 நோயாளிகளின் வருகைப் பதிவாகியுள்ளது; நாளொன்றுக்கு கணக்கிட்டால் 47 முதல் 50 நோயாளிகள் வரை வந்துபோயுள்ளனர்.

அதே சமயம் அந்த குறிப்பிட்ட 6 கிளினிக்குகளில் மொத்தமாக 275,473 நோயாளிகளின் வருகைப் பதிவானது.

நாள் கணக்குக்கு 90-லிருந்து 120 நோயாளிகள் வந்துபோனதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் இந்த EH முறை எந்தளவுக்கு நெரிசலைக் குறைக்க உதவியுள்ளது என்பது குறித்தும் லிங்கேஷ் கேட்டார்.

ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுக்க வருவதால், அது முழுமையாக நெரிசலைக் குறைக்க உதவவில்லை; எனவே மற்ற மருத்துவமனைகளுக்கு அதனை விரிவுப்படுத்தும் திட்டமில்லை; மாற்று வழிகளைக் கண்டறிவதாக துணையமைச்சர் கூறினார்.

எது எப்படி இருப்பினும், பொது சுகாதாரச் சேவை விவேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதை உறுதிச் செய்ய நீண்டகால தீர்வு அவசியம் என்ற கருத்தை Dr லிங்கேஷ் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!